சென்னை மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்னை குப்பம் அருகே மேயர் பிரியாவின் கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேயரின் கார் நின்றதும், பின்னால் வந்த லாரி மோதியதால், மேயரின் கார் இருபுறமும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.
இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா புறப்பட்டு சென்றார். விபத்து நடந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.