சென்னையில் இயங்கி வரும் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. நேற்றுடன் இந்த விழா நிறைவு பெற்றது.
இந்த விழாவில் போட்டி பிரிவில் 12 தமிழ் படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த படமாக சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படம் தேர்வு பெற்றது. அதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக ‘உடன்பால்’ படம் தேர்வானது. அதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கும் தலா 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் படத்திற்காக வைகைப்புயல் வடிவேலு தட்டிசென்றாா்.மேலும்,இதில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது,
சிறந்த எடிட்டருக்கான விருது மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.