சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. இதனால் 10,369 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்த 14,638 குடிபோதையில் வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.15கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.