சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 255 பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமரா!

தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைபள்ளிகளில் இரண்டாம் கட்டமாக 255 பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

பட்ஜெட்டில், 2022 – 2023ம் ஆண்டு அறிவிப்புகளில் நடுநிலை, உயர்நிலை,மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மொத்தம் 159 பள்ளிகளுக்கு ரூ.5.47 கோடி மதிப்பீட்டில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதனை தொடர்ந்து 2024 – 2025 ம் கல்வியாண்டில் 117 தொடக்கப் பள்ளிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களான 1,2,3,7,11,12,14 15 ஆகியவற்றிலிருந்து இணைக்கப்பட்ட பள்ளிகளும் சேர்த்து மொத்தம் 255 பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் 5.7.64 பொருத்தப்படும். மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். என்று அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News