சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்படவுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என்று அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.

RELATED ARTICLES

Recent News