தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டில் நேற்று அதிகாலை தவறி விழுந்தார். இதனால் அவருக்கு இடதுபக்க இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சந்திரசேகர் ராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவே சந்திரசேகர் ராவுக்கு இடதுபக்க மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்கு ஒத்தழைப்பு கொடுத்த சந்திரசேகர் ராவுக்கு நடக்கும் பயிற்சி, பிசியோதெரபி மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் ஊன்றுகோல் மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.