பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

பொய் வழக்கு பதிவு செய்து சிலைக் கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்தது தொடர்பாகவும், சிபிஐ 2023ல் பதிவு செய்த வழக்கில் தற்போது பொன்மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி காதர் பாட்ஷா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவர் மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்தார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான உண்மையான விவரத்தை விசாரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய, இந்த வழக்கை சிபிஜ வசம் ஒப்படைத்தது.

கடந்த ஓராண்டாக சிபிஐ விசாரித்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஐஜி பொன்மாணிக்க வேல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், இன்று காலை முதல் பாலவாக்கத்தில் உள்ள ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் முழுமையாக சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News