உசிலம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சி பயணத்திற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை வருகை தரவுள்ளார்.,
அவரை வரவேற்க செக்காணூரணி முதல் தொட்டப்பநாயக்கணூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதிமுக நிர்வாகிகள் ப்ளக்ஸ் மற்றும் கொடிகளை நட்டு வைத்துள்ளனர்.,
இந்நிலையில் உரிய அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைத்ததற்காகவும், நெடுஞ்சாலைகளில் பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், நீதிமன்ற உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான ப்ளக்ஸ் பேனர்கள் சாலையோரங்களிலும், சாலையின் நடுவிலும் வைக்கப்பட்டதற்காக செக்காணூரணி காவல் நிலையத்தில்
அதிமுக நிர்வாகிகள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,