இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனியின் 44-வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தோனி தன்னுடைய நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்நாளில் அவர் கடந்து வந்த பாதையை பற்றி ஒரு அலசலாக பார்க்கலாம். தன்னுடைய பள்ளி பருவத்திலேயே தோனி தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் ஊக்குவிப்பால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்..

தொடர்ந்து விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.

முதன் முதலாக 2004-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். அதனை தொடர்ந்து, 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராகவும், 2006-ம் ஆண்டு T20யில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி பல இன்னல்களை கடந்து இந்திய அணியில் என்ட்ரி கொடுத்தார்..

அதில் அவரது விளையாட்டை பார்த்த கிரிக்கெட் டீம் தோனியை கேப்டனாக நியமனம் செய்தனர். கேப்டனாக நியமனம் செய்த பின் தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்தியா, முதல் T20 உலகக் கோப்பையையும் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையும் ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு உண்டு.

இதனை தொடர்ந்து 2009ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியை ICC தரவரிசையில் முதலிடத்திற்கு இவரால் சென்றது. அதன் பின்னர் 2008 முதல் CSK அணியின் கேப்டனாக இருந்து 5 முறை சாம்பியன் ஷிப் பட்டம் வென்றார். இவர் தலைமை ஏற்ற பின்னரே CSK அணி IPL-ல் உலகளவில் பேமஸ் ஆனது.

இதுவரையில் தோனி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா, மற்றும் ICC ஒருநாள் வீரர் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். சிறிய நகரத்தில் பிறந்து, தன்னுடைய திறமை மற்றும் உழைப்பால் உலகளவில் புகழ் பெற்று இன்று கிரிக்கெட்டின் சிறந்த ஆட்ட நாயகனாகவும்., ரசிகர்கள் பலருக்கும் இவர் முன்னோடியாக உள்ளார்..
