கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே க்ராசிங் சாலை வழியாக ரயில்வே துறை மேம்பாலத்திற்க்கு ஆய்வு செய்து சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு 50 கோடி பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சாலை இருக்கும் வழியாக பாலம் வந்தால் விரிகோடு,கொல்லஞ்சி,வாணியாம்விளை,கல்லுக்கட்டி,காரவிளை பகுதி மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வசதியாக இருக்கும்.
ஆனால் மாநில அரசு 1.25 கி. மீட்டர் நீளத்தில் சுமார் 370 கோடி பட்ஜெட்டில் மேம்பாலத்திற்கு திட்டம் தீட்டி வருவதாகவும, அதன்படி மேம்பாலம் வந்தால் விரிகோடு,கொல்லஞ்சி,வாணியாம்விளை,கல்லுக்கட்டி,
காரவிளை பகுதிகளை சார்ந்த சுமார் 1000 குடும்பங்களின் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
ரயில்வே துறை:- 50 கோடியில் மேம்பாலம் போதும் என்ற நிலையில் உள்ளது .
இதனால் கடந்த சுமார் 7 ஆண்டுகளாக மேம்பால அளவீடு பணிகள் ஜவ்வாக இழுத்து வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் மேம்பால அளவீடு பணிகளுக்கு வந்த அதிகாரிகளை உண்ணாமலை கடை பேருராட்சி தலைவி தலைமையில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள் திரும்பி சென்றனர்