பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..!

பெங்களூர் தேசிய சர்வீஸ் நெடுஞ்சாலையில் பணியாளர்களை ஏற்றுச் சென்ற தனியார் நிறுவன பேருந்து விபத்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஓச்சேரி, பனப்பாக்கம், தாம்பல் போன்ற பகுதிகளில் உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு என்று பேருந்து வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கம் போல பணியாளர்களை ஏற்றி வந்த., காஞ்சிபுரம் பிள்ளை சத்திரம் பகுதியில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்துக்கு முன்பாக சுற்றுலா பயணிகளின் பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அவை திடீரென பிரேக் அடித்து நிறுத்தப்பட்ட நிலையில்., அதன் பின்னால் வந்த தனியார் நிறுவன பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சொகுசு பேருதின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 40 ஒப்பந்த பணியாளர்களின் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தலை, கால், கை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்., விபத்தில் சிக்கியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்காக சென்று கொண்டிருந்த நபர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News