இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை தாக்கிய காளைகள்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100க்கும் மேற்பட்ட கோயில் காளை மாடுகள் பேருந்து நிலையத்திலும் கடைவீதியிலும் சுற்றி திரிகின்றன.

அடிக்கடி இந்த காளைகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போடுவதால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இரண்டு காளைகள் கண்மூடித்தனமாக ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு சண்டை போட்டன. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை அந்த மாடுகள் முட்டியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.

இந்த மாடுகளால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பலமுறை மானாமதுரை நகராட்சி மற்றும் திருப்புவனம் பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News