மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு 4g சேவை வழங்கிட வலியுறுத்தி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக BSNL ஊழியர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் BSNL அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4G மற்றும் 5G சேவை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி BSNL தொழிலாளர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்டத் தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.