ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் சச்சின். இந்த படத்தில், சின்ன சின்ன உடல் அசைவுகள் மூலமாக, ரசிகர்களை பெருமளவில் விஜய் கவர்ந்திருப்பார்.
மேலும், விஜயும், வடிவேலுவும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள், இன்றளவும் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம், 20 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று ரீ ரிலீஸ் ஆகியிருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து, புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, 2 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.