கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. கடந்த 1-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 46 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.
இதுவரை வெளியான சூர்யாவின் திரைப்படங்களிலேயே, இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தான், அதிகம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம், முதல் நாளில் 40 கோடி ரூபாயை வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.