சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல், மருத்துவக் கல்லூரியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் மருத்துவர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் இயங்கி வருகிறது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் பாம் வைத்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு லேண்ட்லைன் போன் மூலம் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார்.
இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததன் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்கள், ஊழியர்கள் பல் சிகிச்சை மேற்கொள்ள வந்த பொதுமக்கள் அனைவரையும் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.
மருத்துவக் கல்லூரியில் பாம் வைத்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் பொதுமக்கள் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் மருத்துவ கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கடலூர் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர், பாதுகாப்பு கருத்தில் கொண்டு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றி உள்ளதாக போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.
மோப்பநாய் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்த பிறகு பாம் வைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியவரும் அல்லது மிரட்டல் விடுவதற்காக இங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் போன் செய்திருக்கலாம் என்ற ஒரு தகவலும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.