அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. கன்னட டீசரை சிவராஜ்குமாரும், தெலுங்கு டீசரை சிரஞ்சீவியும் வெளியிட்டனர். ஆனால் தமிழ் டீசரை எந்த ஹீரோவும் வெளியிடவில்லை.

“தமிழிலும் பெரிய ஹீரோவை கொண்டு வெளியிடலாம் என்று யோசித்தோம். அதற்கு சரியான நேரம் அமையவில்லை. என்றாலும் படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள் வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என பாபி சிம்ஹா பேசினார்.
ஜிகிர்தண்டா 2ம் பாகத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டபோது “அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை” என்று பதிலளித்தார்.