சென்னையில் வெள்ளம் மற்றும் எண்ணெய் கசிவுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆழ்கடல் நச்சு உயிரினங்கள் கரை ஒதுங்கியதாக ஐரோப்பிய ஊடகமான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ப்ளூ டிராகன் என்ற கொடூர விஷம் கொண்ட உயிரினம் கரை ஒதுங்கியுள்ளது. கடலில் கலக்கப்பட்ட எண்ணெய், வெள்ளம், புயல் காரணமாக ஏற்பட்ட கடினமான அலைகள் ஆகியவை இந்த டிராகன் வகை மீன்கள் கரை ஒதுங்க காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.