அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று மதியும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் அடிபட்டு உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் புகார் கொடுக்க வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த காவலர்கள் புகாரை ஏற்காமலும் முதலுதவி எதுவும் செய்யாமல் விரட்டியடித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நபர் கூறுகையில்., குடும்பத் தகராறில் மனைவி அடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்., மேலும் காவல்துறையினர் புகாரை ஏற்று நீதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.