“பார்வை இழந்த மாற்றுத்திறனாளி” குரூப் 2 தேர்வில் வெற்றி..!!

பெற்றோர்களை இழந்து உறவினர் பராமரிப்பில் வளர்ந்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று துணை வணிகவரித்துறை அலுவலராக தேர்வு. கல்வியால் வெளிச்சத்திற்கு வந்த மாணவி.

திருவாரூர் அருகே வேலங்குடியை சேர்ந்தவர் வர்ஷா. பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான இப்பெண் குரூப் 2 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று சிங்க பெண்ணாக இந்த உலகத்துக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

வர்ஷா, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு பிறவியிலேயே 90 சதவீத பார்வை இழப்பு இருந்துள்ளது. மேலும் இவர் பிறந்து ஒரு வயது இருக்கும் போதே இவரது தாய் தந்தையர் இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.

இந்த நிலையில் வேலங்குடியில் உள்ள அவரது பாட்டியின் அரவணைப்பிலும், இவரது அத்தைகளின் அரவணைப்பிலும் வளர்ந்த நிலையில், இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதையும் பொருட்படுத்தாமல் கல்வி ஒன்று தான் இவருக்கு வழிகாட்டும் என்பதை உணர்ந்து உறவினர்கள் உதவியோடு பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளனர். இதற்கு மாணவி வர்ஷாவும் தனது உழைப்பை கொடுத்து, கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி என்பதால் ஸ்க்ரைப் வைத்துக் கொண்டு தேர்வுகளை எழுதினார். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற இவருக்கு அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தோடு செயல்பட தொடங்கினார்.

இந்த நிலையில் தான் முதன் முதலில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற வர்ஷா, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் பங்கேற்று தமிழக அளவில் 771 வது இடத்திலும், சமூக அடிப்படையில் ஆன தரவரிசையில் 58 வது இடத்திலும், மாற்றுத்திறனாளிகள் தரவரிசையில் மாநிலத்தில் முதலிடத்திலும் வெற்றி பெற்று வணிகவரித்துறை துணை அலுவலராக தேர்வு பெற்றுள்ளார்.

பார்வையிழந்த இந்த சாதனைப் பெண் இது குறித்து கூறும்போது. எனதுபாட்டி உள்ளிட்ட உறவினர்கள் என்னை கண் தெரியவில்லை என்னை கைவிடாமல் பாதுகாத்ததோடு தொடர்ந்து நான் கல்வி பயில உதவி செய்தனர். அவர்களது இந்த நம்பிக்கை, எனக்கு தொடர்ச்சியாக பயிற்றுவித்த ஆசிரியர்களின் பேரு உதவி காரணமாக எனக்குள் தன்னம்பிக்கை வளர காரணமாக இருந்தது.

அவர்களது நம்பிக்கைக்கு வலிமை சேர்க்க நாம் நிச்சயம் ஒரு அரசுப் பணியில் சேர வேண்டும் என்கின்ற உத்வேகத்தோடு படித்தேன் அதன் காரணமாக எனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது மட்டுமே எனது இலக்க அல்ல. எனது விருப்பம் அனைத்தும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே ஆகும். அதனை நோக்கி தொடர்ந்து பயணிப்பேன் என கூறினார்.

RELATED ARTICLES

Recent News