விழுப்புரத்தில் பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் – காவல்துறை தடுத்ததால் பரபரப்பு – பாஜக தொண்டர்களை காவல்துறையினர் அடித்து வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் பாஜக மகளிர் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் நகர தலைவர் விஜயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் தாயைப் பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், பாஜக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாஜக தொண்டர்களை அடித்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட பாஜகவினர், வாகனங்களில் செல்லும் போதே கோஷமிட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.