கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கன்னியாகுமரி விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க.வினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டதாக தெரியவந்துளள்ளது.