ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 மூலம் பிரபலமானவர் ஷெபாலி ஜிரிவாலா. ஆனால் அதற்கு முன்னரே இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்..குறிப்பாக காந்த லாகா என்ற பாடல் இவரது அடையாளமாக மாறியது. அதன் பின்னர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ல் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவர் டாஸ்க்குகளை கையாண்ட விதம், எந்த ஒரு செயலையும் தைரியமுடனும் துணிச்சலுடனும் செய்வது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.. இதனால் அவருக்கு ரசிகர்களும் அதிகமானார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதனால் அவரது கணவர் ஷெபாலி ஜிரிவாலா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிர் இழந்துள்ளார்..

இவரது மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..