பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் நடைபெற உள்ளன.

RELATED ARTICLES

Recent News