பொள்ளாச்சியில் 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பேக்கரி கடை உரிமையாளரை உறவினர்கள் சராமரியாக தாக்கினர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள் என்கின்ற கார்த்திக், இவர் பாலக்காடு சாலையில் உள்ள திருவள்ளுவர் திடல் பகுதியில் வேலன் பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர்கள் நேற்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனிடையே மாணவியின் உறவினர்கள் கார்த்திக்கை சராசரியாக தாக்கியுள்ளனர். அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..