மோகன் ஜி-யின் இயக்கத்தில், செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் உருவான திரைப்படம் பகாசூரன். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம், நல்ல வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் நாள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அதற்கு அடுத்தடுத்த நாட்களில், பலத்த அடியை இப்படம் சந்தித்துள்ளது. அதாவது, படம் வெளியானதில் இருந்து, இதுவரை 3 கோடி ரூபாய் மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
இப்படியே சென்றால், செலவிட்ட பட்ஜெட்டை காட்டிலும், மிகவும் குறைவான அளவே, படம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.