வேலூரில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர்.
வேலூர் மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிரீன் சர்கிள் பகுதியிலிருந்து. அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஊரீசு கல்லூரியின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது .
இதனை வேலூர் மாநகராட்சியின் மேயர் சுஜாதா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்று கையில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஒருவர் கண் தானம் செய்வதன் மூலம் 4 பேருக்கு கண் பார்வை கிடைக்கும் என விழிப்புணர்வு செய்தனர். இந்த ஊர்வலத்தில் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல அலுவலர் மருத்துவர் ஐசக் அப்ரஹாம் மற்றும் பேராசிரியர் மாறன் உள்ளிட்டோரும் கண் மருத்துவர்கள் செவிலியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலமானது வேலூர் ஊரீசு கல்லூரி அருகில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது பின்னர் கண் தானம் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது…