அடேங்கப்பா…! வைரலாகும் இந்தியன் 2 Intro வீடியோ..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை இன்று மாலை 5.30 மணிக்கு தமிழில் ரஜினி, தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி, இந்தியில் நடிகர் அமீர்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன் லால் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.அதில் விரல்களை ஒன்று சோ்த்து இந்தியன் 2 என வரும் படத்தின் தலைப்பும் ‘எங்கு தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன்’ போன்ற வசனங்களும் இடம்பெற்று படத்தின் எதிா்பாா்ப்பை அதிகாிக்க செய்துள்ளது இந்த வீடியோவை ரசிகர்கள் ஷோ் செய்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News