நடிகா் அசோக் செல்வன் , நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் கடந்த செப்டம்பா் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.பிறகு இருவரும்
தங்களுடைய படங்களுக்கு திரும்பி விட்டனா். இந்நிலையில், அசோக் செல்வனின் சபாநாயகன் படமும், கீர்த்தி நடித்த கண்ணகி படமும் ஒரே நாளில்
வெளிவரவுள்ளது.
இதுகுறித்து நடிகா் பயில்வான் ரங்கநாதன் கேள்வி ஒன்றை கேட்டள்ளாா்.அதாவது ’அசோக் செல்வனுக்கும் உங்களுக்கும் சண்டையா? இருவரது படமும் ஒரே நாளில் வருகிறே, எது ஜெயிக்க வேண்டும்?’ என பயில்வான் கேட்க இதற்கு கோபமடைந்த கீா்த்தி பாண்டியன் அதற்கு பதிலளித்துள்ளாா், ”எங்களுக்கு சண்டை என்று நீங்கள் பார்த்தீங்களா? இரண்டு பேருடைய படமும் ஒரே நாளில் வருவதால் எங்களுக்குள் போட்டி இல்லை! இரண்டு படமும் ஜெயிக்க வேண்டும்” என்று கூறியுள்ளாா்.