தேசிய விருதுகளை பெற்ற பிரபல கலை இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை

‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57). நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் மும்பை கர்ஜத் பகுதியில் உள்ள தனது ஸ்டுடியோவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரும் ஆகஸ்டு 9-ந் தேதி அவர் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பல நாட்களாக நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News