பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த சம்பவத்தில் ஒருவர் கைது

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது பைக்கின் முன் பகுதியில் பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனை வீடியோ எடுத்த திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News