கோவை வடக்கு தொகுதியில், அதிமுகவின் அம்மன் அர்ஜூனன் என்பவர் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையில், காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை அறிந்த அதிமுக நிர்வாகிகள், அம்மன் அர்ஜூனன் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.
இதனால், பாதுகாப்பு கருதி, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மன் அர்ஜூனன், வருமானத்திற்கு அதிகமாக, 2.75 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்ததுள்ளார் என்று, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.