பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு
திண்டிவனம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் செய்தியார்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததின் பேரில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் அடிப்படையில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அன்புமணி எந்தவித பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் இருமுறை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையிலும் எழுத்து பூர்வமாகவும் நேரில் வந்து விளக்க அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அன்புமணி மீது சொல்லப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எந்த நியாயமும் இல்லை என்பதால் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டிருப்பது
தனக்கு அவமானம் என்று கூறினார்.
அன்புமணி மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என கருதப்படுவதாலும் தான் தோன்றி தனமாக தகுதியற்ற அரசியல்வாதியாக அன்புமணி செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.
கட்சியை அழிக்க முயற்சிக்கும் செயல் என தெரியவருவதால் கட்சி விரோத போக்கு என முடிவு செய்யப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் அன்புமணி நீக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளையும் தனது நிர்வாகிகளுக்கு ராமதாஸ் விதித்துள்ளார்.அதாவது கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும், கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டால் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
கட்சி அமைப்புகள் விதிகள், ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி உடன் உள்ளவர்கள் தனி கட்சியாக செயல்படுவதை போல் இருப்பதாக சாடினார்..
தொடர்ந்து பேசிய அவர் அன்புமணியுடன் உள்ள பத்து பேருக்கும் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் உதவி செய்து வளர்த்துவிட்டதாகவும், வளர்த்து விட்டவர்களை யாரென்று சொல்ல விரும்பவில்லை, மூத்தவர்கள் நான்கு ஐந்து பேர் அன்புமணிக்கு அறிவுரை கூறியபோது அதை கேட்காமல் அன்புமணி செயல்பட்டார்.
மரியாதைக்குரிய பழ கருப்பையா தந்தையிடம் மகன் தோற்பது தோல்வி அல்ல தந்தை சொல்லை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என பழகருப்பையா கூறியதை சுட்டிக்காட்டி பேசிய அவர்,
மூத்தவர்கள் சொல்வதை அமிர்தம் போல் கேட்காமல் அன்புமணி இருந்துள்ளதாகவும், பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்தபோது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என தெரிவித்தார்.
பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பானமை அன்புமணிக்கு இல்லை, தன்னுடைய இரா. என்ற தலைப்பெழுத்தினை மட்டும் அன்புமணி போட்டுக்கொள்ளலாம் என் தெரிவித்தார்.
பாமகவை 45 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கில் உழைத்து கஞ்சியோ கூழோ குடித்து 96 ஆராயிரம் கிராமங்கள் சென்று கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கி வளர்த்தாகவும் இந்த கட்சியில் சேறுகிறவர்கள், சேர்ந்த பிறகு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. அரசியல் பயிலரங்கமும் தொடங்கி இன்று வரை நடத்தி வருவதாகவும் அதிலையே அன்புமணிக்கு நம்பிக்கை இல்லை ஆதரவும் இல்லை என கூறினார்.
அன்புமணிக்கு ஆலோசனயாக தனியாக கட்சியை அன்புமணி ஆரம்பித்து கொள்ளலாம் தனி கட்சி ஆரம்பித்து கொள்ள மூன்று முறை தான் தெரிவித்துள்ளதாகவும், தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சியில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை அது பிள்ளையாக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும் கட்சி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை விவாதித்து கடிதம் அனுப்பட்டது. அதற்கு கடிதத்தை பெற்றுகொண்டு பதில் ஏதும் அளிக்காததால் இந்த முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
அன்புமணியை நீக்கிய முடிவு பாமகவிற்கு பின்னடைவு கிடையாது, பயிர் செய்தால் களை முளைக்க தான் செய்யும் அதனால் பயிர் செய்யாமல் இருக்க முடியாது, கட்சியின் வளர்ச்சிக்கு குந்தமாக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டேன், அன்புமணி கட்சியை தொடங்கினாலும் அந்த கட்சி வளராது என தெரிவித்தார்.
இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் முடிக்க விடல் என்ற குறளை சுட்டிக்காட்டிய அவர் தன்னோடு 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய் சொல்வதெல்லாம் பொய், அண்ட புலுகு ஆகாச புலுகு வடிகட்டிய பொய் என பல்வேறு கட்சியினர் தெரிவிப்பார்கள் என்னுடைய மனம் எவ்வளவு வருந்திருக்கும் என்பது என்னையே உளவு பார்த்தது யாரை யார் வேவு பார்ப்பது இதைவிட மோசமான செயல் கிடையாது இந்த இடத்தில் உளவு பார்க்க என்ன இருக்கிறது என கடுமையாக சாடினார்.
இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி தான் தலைவர் என்பதை தெரிவிக்கவில்லை அது பொய், தலைமை பண்பு அன்புமணிக்கு இல்லை அன்புமணியுடன் உள்ள சிலபேர் அன்புமணியை தவறாக வழி நடத்துகிறார்கள், சரியாக வழிநடத்துகிறோம் என பத்து பேர் அன்புமணியிடம் உள்ளவர்கள் தனித் தனியாக வந்து சந்தித்து இந்த காரணத்திற்காக வந்து கூறினால் மன்னிக்கிறேன்.
இதேபோல் செயல் தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..
