பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர், தனக்கு நடந்த உருவ கேலி குறித்து, சமீபத்தில் பேசியுள்ளார்.
அதாவது, “எனக்கு 18 வயது இருந்தபோது, நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். அதனால், என்னை பலரும் கேலி செய்வார்கள். தீ குச்சி போல நீ இருக்கிறாய் என்று கேலி செய்வார்கள். இப்போது நான் அப்படி இல்லை.
இருந்தும், நீ அறுவை சிகிச்சை செய்துவிட்டாய் என்று என்னை பலர் கேலி செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி இருந்தாலும், சிலர் உங்களை குறை கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதுவும் குறிப்பாக, பெண்களைத் தான், அதிகம் விமர்சிக்கிறார்கள்” என்று, அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.