தளபதி விஜய் நடிப்பில், ஜெகன் என்பவர் இயக்கத்தில், கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதிய கீதை. இந்த படத்தில், மீரா ஜாஸ்மீன், அமிஷா பட்டேல் ஆகிய இரண்டு பேர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இதில், அமிஷா பட்டேல் என்பவர், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும், பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அமிஷா பட்டேல், நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சியாக இருக்கும் இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.