இந்திய பொருட்களின் மீது அமெரிக்க 50% வரி விதிப்பு செய்துள்ளது., இதனை கண்டிக்கும் வகையில்
தமிழ்நாடு வணிக சங்க கூட்டம் சார்பில் அமெரிக்க பொருட்களை புறம் தள்ளவுள்ளதாக வணிகர் சங்கம் எச்சரிக்கை
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் “நம்ம எக்ஸ்போ” என்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சி 150 மேற்பட்ட ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வசந்த் & கோ, ஜி.ஆர்.வி, அருண் ஐஸ் கிரீம், போன்ற முன்னணி நிறுவனங்கள் ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்ரமராஜா.., தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முதல்முறையாக வணிக வளாகத்தில் நம்ம எக்ஸ்போ என்ற தலைப்பில் தொடங்கியுள்ளதாகவும், ஒரு கிராமத்திலிருந்து வரும் பொருட்களைக் கூட நினைவுபடுத்தும் வகையில் நம்ம எக்ஸ்போ நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்ற கோஷத்தை எடுத்துள்ளனர் அதனை தழுவி வணிகர் சங்கத்தின் சார்பில் உள்நாட்டு பொருட்கள் வாங்க வேண்டும் உள்நாட்டு வியாபாரிகள் மேம்படுத்த வேண்டும் என கோஷத்தை முன்னெடுத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறினார்.
அமெரிக்கா கிட்டத்தட்ட 50% இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பு செய்துள்ளது இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு வணிக சங்க கூட்டம் சார்பில் அமெரிக்க பொருட்களை புறம் தள்ள உள்ளோம் அகில இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களுடன் இணைந்துள்ளோம் , ஒரு வார காலத்தில் தலைவர்களுடன் கலந்த ஆலோசித்து அமெரிக்க பொருட்கள் எவற்றை புறந்தள்ள உள்ளோம் என ஒரு பட்டியலாக அறிவிப்பை வெளியிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளர்.