குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்..!! கடுப்பான அம்பிகா..!!

ரிதன்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை அம்பிகா கோரிக்கை விடுத்துள்ளார்..

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களின் உயிர்களுக்கு இருப்பதில்லை என்று வேதனை தெரிவித்தார்..

மேலும் ரிதன்யாவின் தற்கொலையில் 11 நாட்கள் ஆகியும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதமாக செயல்படுவதாக சாடினார்.. மேலும் மற்ற நாடுகளில் வழங்கப்படும் கடுமையான தண்டனையை போல., இந்தியாவிலும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலே தற்கொலை மரணங்கள் குறையும் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News