திருவள்ளூர் அருகே தான் படித்த பள்ளிக்கு பேருந்து வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது..!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகப்பே மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் இவர் சிறிய வயதில் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டதக கூறப்படுகிறது இந்நிலையில் போக்குவரத்து வசதி இல்லாததால் தனது படிப்பை பத்தாம் வகுப்பு வரை முடித்து தன்னுடைய கடின உழைப்பால் வாகன தொழிலில் முன்னேறியுள்ளார் தன்னை போன்று மற்ற ஏழைக் குழந்தைகளும் போக்குவரத்து வசதி இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி வாழ்வில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக ரூ.40 லட்சம் மதிப்பிலான பேருந்தை தான் படித்த பண்ணூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு வாங்கித் கொடுத்துள்ளார், இத்தகைய பேருந்து மூலமாக கடம்பத்தூர் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுக்கடை காந்தி பேட்டை, சமத்துவபுரம் விஷ்வநாதபுரம், அழிஞ்சிவாக்கம், மேட்டுச்சேரி, மப்பேடு, கீழச்சேரி, பண்ணூர் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 90 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற உள்ளனர் பேருந்துக்கான பராமரிப்பு செலவும் ஓட்டுனருக்கான மாத சம்பளம் முழுமையாகவும் அவர் ஏற்றுள்ளார், போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் தன்னை போன்று நிறுத்தி விடக்கூடாது என எண்ணி முன்னாள் மாணவர் தான் படித்த பள்ளிக்கு பேருந்து வாங்கி கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

RELATED ARTICLES

Recent News