பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் வேலைகள் தொடங்கியது முதலே, கதை மீதான கவனிப்பில் மிகத் தீவிரமாக இருக்கும் அஜித், இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

இதற்கு முக்கிய காரணம், ஏகே62-விற்கு பிறகு இரண்டு வருடம் ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே ஏகே 62 படத்தின் வேலைகளை மார்ச் மாதம் தொடங்க வேண்டும் என்றும், தீபாவளி அன்று கண்டிப்பாக ரிலீஸ் ஆக வேண்டும் என்றும் திட்டவட்டமாக அஜித் சொல்லிவிட்டார் எனக் கூறப்படுகிறது.
மேலும் படத்தின் பட்ஜெட் தொகையை முன்னதாகவே நிர்ணயிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக லைக்கா நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.