நடிகா் அஜித் தற்போது , விடாமுயற்சியில் பிஸியாகியுள்ளாா். இந்நிலையில் இவா் இதற்கு முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கிய இயக்கிய அசோகா படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அஜித் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பாா். இதுகுறித்து தான் அவா் பேசியுள்ளாா் நடிகர் ஷாருக்கானை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவருடன் நடிப்பது நல்ல அனுபவத்தை தரும் என்று நம்பினேன். அதேநேரம் அசோகாவில் அனுபவத்தை தாண்டி ஷாருக்கானிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எவ்வளவு பெரிய ஸ்டார்.
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது காட்சி முடிந்துவிட்டாலும் மற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்துகொண்டிருப்பார். அது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அவர் சுறுசுறுப்பாக இருந்ததால் மொத்த யூனிட்டுமே அப்படி இயங்கியது. இந்த விஷயத்தை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.இவாின் இப்பதிவு தற்போது வைரலாகி அனைவரையும் ஆச்சாியமடைய செய்துள்ளது.