அதிமுகவினர் வைத்த பேனரை கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி.ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று பேனர் வைப்பதற்காக வந்த பொழுது அதிமுக சார்பில் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளகள் அதிமுகவினர் வைத்த பேனரை மறைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனரை நிறுவினர். இதனால் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்க்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர், பெரியகுளம் காவல் ஆய்வாளர் அதிமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிமுகவினர் வைத்த பேனர் அகற்றப்பட்டது.

மேலும் பேனர் வைப்பதில் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

Recent News