காரியாபட்டியில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்ற சென்றபோது
எதிரே வந்த சிறுவனின் காரை அதிமுகவினர் அடித்து உடைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது அந்த கூட்டத்திற்குள் 18 வயது பூர்த்தியடையாத சிறுவனின் கார் ஒன்று நுழைந்துள்ளது.
காவல்துறை தடுத்து நிறுத்தியும் அவர் கேட்காமல் உள்ளே சென்றதால்., கோபமடைந்த அதிமுகவினர் காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதில் அச்சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது., பின்னர் அச்சிறுவனின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற ரோடு ஷோவின் போது ஆம்புலன்ஸ் வழிமறிக்கப்பட்டு., ஓட்டுநரை அவர் மிரட்டியதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்., தற்போது அதிமுகவினரால் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.