இன்று அனைவராலும் பெரிதும் பேசப்பட்டு வைரலாகி கொண்டிருப்பது AI Deepfake வீடியோஸ்.இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதற்கு இணையாக தீமைகளும்
இருக்கிறது.அதை உறுதிபடுத்தும் விதமாக திரைப்பிரபலங்கள் பலரின் முகங்களோடு AI தொழில்நுட்பத்துடன் ஆபாச முறையில் வீடியோக்கள் வெளியாகி பலைரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதைத்தொடா்ந்து,தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் முகத்தோடு சிவாஜி படத்தில் வரும் சில வசனங்களோடு AI Deepfake வீடியோஸ் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில், அதற்கு 2024 தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என்பதை மீம்ஸ்கள் , டெம்ளேட்ஸ்களுடன் அந்த வீடியோவை இனைத்து பாஜக உறுப்பினா்கள் பலரும் ஷோ் செய்து வருகின்றனா்.இவ்வீடியோவிற்கு நெட்டிசன்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் பலரும் தங்களது காமெடி கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.