அஜித் பட இயக்குனருடன் இணையும் அதிதி சங்கர்..!

அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை உருவாக்கியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். தற்போது இவரது, அடுத்த படம் குறித்தான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி, ஆகாஷ் முரளி நடிக்க இருப்பதாகவும், இவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை ஆகாஷின் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது நடிகை அதிதி சங்கர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News