“என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்” – பிரபல இயக்குநரின் மகள் பகீர்!

சினிமாத்துறையில் உள்ள பெண்களுக்கு, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வாய்ப்பு மறுக்கப்படும் என்ற பயத்தில், பலர் இதனை வெளியில் கூறாமல் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க, பிரபல இயக்குநர் ஒருவரின் மகளே, அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இந்த தகவல், ரசிர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, அஜித்தின் காதல் கோட்டை என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் தான் அகத்தியர். இவரது மகளான விஜயலட்சுமி, சென்னை 28, அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 பாகம் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ஒரு பெண் சினிமாவில் நடிக்க வந்துவிட்டாலே, அவள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவம், எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். பிரபல இயக்குநரின் மகளுக்கு இந்த நிலை என்றால், சாதாரண பெண்களுக்கு எந்த அளவில் இருக்கும் என்பதை நினைத்தாலே, அதிர்ச்சியாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News