விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை?

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில், விஜய்க்கு அம்மாவாக யார் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, நடிகை ரேவதி இந்த படத்தில், விஜய்க்கு அம்மாவாக நடித்து வருகிறாராம்.

இதற்கு முன்னர், நடிகர் விஜயுடன், தமிழன் திரைப்படத்தில், அவருக்கு அக்காவாக ரேவதி நடித்திருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News