கடுமையான காய்ச்சல்….நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி..!

நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்புவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் வீக்னஸ் ஆகியவற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அப்பல்லோ ஹைத்ராபாத் நல்ல கைகளில் உள்ளேன். உங்கள் உடல் மெதுவாகச் சொல்லும் போது தயவு செய்து அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள். மீட்புக்கான பாதையில், ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டும்”… என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்புவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News