பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் ஆண்ட்ரியாவின் கேரியரிலேயே முக்கியமான படமாகும். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பெண்கள் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் இருப்பதால் இதனைப் பார்த்த சிலர் இப்படியா பெண்கள் தின வாழ்த்து சொல்வது என கேள்வி எழுப்பி ஆண்ட்ரியாவை விமர்சித்துவருகின்றனர்.