பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ், திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.
இவர் குழந்தை நட்சத்திரமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணம் அடைந்தார். அதற்கு முன்பு லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சேஷு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது நகைச்சுவை நடிகரான விஷ்வேஸ்வர ராவ் உயிரிழந்த செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.