“செம க்யூட்டாக இருக்காங்களே” – நடிகர் விமலுக்கு இவ்வளவு அழகிய மகளா?

பசங்க, களவானி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் விமல். ஆனால், அதன்பிறகு, திரைப்படங்களை சரியாக தேர்வு செய்யாததால், படுதோல்வியை சந்தித்து வந்தார்.

தற்போது, மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ள விமல், விலங்கு என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்துள்ளார். இந்நிலையில், தனது மகள் ஆத்விகா உடன், விமானத்தில் செல்லும் புகைப்படத்தை, இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வழங்கிய அவர், “யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ?” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.